இனப்பெருக்கக் கோழிகள் மேலாண்மை
-
இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் முட்டைக்கோழிகளுக்கான மேலாண்மை முறை வணிகரீதியாக முட்டைக் கோழி வளர்ப்பு மேலாண்மையினைப் போன்றது.
-
இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் கோழிகளின் விலை அதிகம், மேலும் அவை இடும் கருவுற்ற முட்டை மற்றும் பொரிக்கும் குஞ்சுகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது. எனவே இனப்பெருக்கக் கோழிகளைப் பராமரிக்கும் போது மிகுந்த கவனத்துடன் பராமரித்தால் மட்டுமே இலாபம் அடைய முடியும்.
-
மேலும், இனப்பெருக்கக் கோழிகளைப் பராமரிக்கும் போது, சேவல்கள் பராமரிப்பு, மற்றும் குஞ்சு பொரிப்பகப் பராமரிப்பு போன்றவை கூடுதலான வேலைகள் என்பதால் மிகுந்த கவனத்துடன் இவற்றை மேற்கொள்வது அவசியமாகும்.
இனப்பெருக்கத்திற்கு வளர்க்கப்படும் முட்டைக்கோழிகளை வளர்க்கும் முறைகளும் தேவைப்படும் இடவசதியும்
-
இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் முட்டைக்கோழிகளை ஆழ்கூளத்திலும், சாய்வான தரைகளிலும், சாய்வான தரைகளும், ஆழ்கூளம் இணைந்த தரை அமைப்பிலோ அல்லது இனப்பெருக்கக் கோழிகளுக்கான கூண்டுகளிலும் வளர்க்கலாம்.
-
இனப்பெருக்கத்திற்குப் பயன்படும் பெட்டைக் கோழிகளுக்கு ஆழ்கூளத்தில் வளர்க்கும் போது 1860 சதுர செமீ, சாய்வான அல்லது கம்பி வலை தரையில் 450 சதுர செமீ இட அளவும், கூண்டு முறை வளர்ப்பில் சேவல்களுக்கு 700 சதுர செமீ இட அளவும் தேவைப்படும்.
சேவல்களும், செயற்கை முறை கருவூட்டலும்
-
ஒரு நாள் வயதான சேவல் கோழிக்குஞ்சுகளுக்கு கால் விரல்களையும், தாடிகளையும் வெட்டி விட வேண்டும். சேவல்களை அவற்றின் 0-21 வார வயது வரை தனியாக வளர்க்கவேண்டும்.
-
இயற்கையான முறையில் இனவிருத்தி செய்யும் போது, பெட்டைக் கோழிகளின் எண்ணிக்கையில் 12%மும், செயற்கை முறை கருவூட்டல் முறையில் கோழிகளை இனப்பெருக்கம் செய்யும் போது கோழிகளின் எண்ணிக்கையில் 8% ம் சேவல்களை வளர்க்க வேண்டும்.
-
இனப்பெருக்க வயது ஆரம்பிக்கும் போது (22 வாரங்கள்), 100 பெட்டைக் கோழிகளுக்கு 8 சேவல்களை வளர்க்க வேண்டும்.
-
மெலிந்த, நொண்டும் நிலையிலுள்ள, உடல் நலமிற்ற சேவல்களை பண்ணையிலிருந்து கழித்து விட வேண்டும். செயற்கை முறைக் கருவூட்டல் செய்யும் போது 60% நகரும் விந்தணுக்களை உடைய 0.5 மிலி விந்து உற்பத்தி செய்யக்கூடிய 5% சேவல்களை வளர்க்க வேண்டும்.
-
சேவல்களிலிருந்து விந்துவை சேகரித்தவுடன் 0.03 – 0.05 மிலி விந்துவைப் பயன்படுத்தி பெட்டைக் கோழிகளை 5 நாட்களுக்கு ஒரு முறை செயற்கை முறைக் கருவூட்டல் செய்ய வேண்டும்.
அலகு வெட்டுதல்
-
பெட்டை மற்றும் சேவல் கோழிகளுக்கு அவற்றின் 10-14 நாட்கள் வயதிலும், பிறகு 12-14 வார வயதிலும் அலகுகளை வெட்ட வேண்டும்.
-
பெட்டைக் கோழிகளுக்கு அவற்றின் அலகின் அடிப்பகுதியிலிருந்து 2 மிமீ அளவு விட்டு அலகினை வெட்ட வேண்டும். ஆனால் சேவல்களுக்கு அவற்றின் அலகின் அரைப்பகுதியினை வெட்டி விட வேண்டும்.
-
அலகின் மேல் மற்றும் கீழ்ப்பகுதியினை நேராகக் வெட்ட வேண்டும். வைட்டமின் கே ஐ அலகு வெட்டுவதற்கு ஒரு நாள் முன்பாகவும், அலகு வெட்டி 2-3 நாட்களுக்கு தாது உப்புகள் கலந்த தண்ணீரை அளிக்க வேண்டும்.
தடுப்பூசி அளிப்பதும், உடல் நல மேலாண்மை முறைகளும் பின்வருமாறு
-
இனப்பெருக்கத்திற்கு வளர்க்கப்படும் கோழிகளுக்குவணிகரீதியாக வளர்க்கப்படும் கோழிகளுக்கு அளிப்பதைப் போன்றே மேற்கூறிய மேலாண்மை முறைகள் அளிக்கப்படுகிறது.
-
கோழிகளுக்கு தடுப்பூசி அளிப்பது இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம், மற்றும் அந்தப் பகுதிகளில் உள்ள நோய்களின் தாக்குதலுக்கேற்றவாறு வேறுபடும்.
-
ஒரு வித்தியாசம் என்னவென்றால், இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கு அவை முட்டை உற்பத்தி செய்வதற்கு முன்பாக இராணிக்கெட் நோய், ஐபிடி, ஐபி, ஆர்இஓ, மைக்கோபிளாஸ்மா நோய்களுக்கு கொல்லப்பட்ட நோய்க்கிருமிகளைப் பயன்படுத்தித் தயாரித்த தடுப்பூசிகள் அளிக்கப்பட வேண்டும்
-
சில நேரங்களில் இராணிக்கெட் நோய், ஐபிடி, ஐபி, நோய்களுக்கு கொல்லப்பட்ட வைரஸ்கள் கொண்ட தடுப்பூசிகளை இனப்பெருக்கக் கோழிகளின் 45ம் வார வயதில், குறிப்பாக நோய்த்தாக்குதல் அதிகமுள்ள பகுதிகளில் அளிப்பதால் கோழிக்குஞ்சுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. கோழி காலரா நோய்க்கான தடுப்பூசியினை மட்டும் நோய்த்தாக்குதல் உள்ள பகுதிகளில் இனப்பெருக்கக் கோழிகளின் 10 வார வயதில் அளிக்க வேண்டும்
-
மேலும் மைக்கோபிளாஸ்மா மற்றும் சால்மொனெல்லா நோய்க்கிருமிகளின் தாக்குதல் இனப்பெருக்கக் கோழிகளுக்கு இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க அவற்றின் 16 வார வயதில் சோதனை செய்து மேற்கூறிய நோய்க்கிருமிகளின் தாக்குதல் இருக்கும்பட்சத்தில் அவற்றைப் பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்.
-
ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு ஆறு வாரத்திற்கு ஒரு முறைக் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஆனால் கூண்டு முறையிலும், சாய்வான தரை அமைப்பிலும் வளர்க்கப்படும் கோழிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்கமும் செய்யவேண்டும்.
-
குடற்புழு நீக்கம் செய்த பிறகு இனப்பெருக்கக் கோழிகளுக்கு லசோட்டா தடுப்பூசியினை அளிக்கவேண்டும்.
தீவனமளித்தல்
-
இனப்பெருக்கத்திற்குப் பயன்படும் முட்டைக்கோழிகளுக்கு, வணிகரீதியாக வளர்க்கப்படும் கோழிகளைப் போன்றே தீவனத்திலிருக்கும் மூலப்பொருட்கள் இருக்குமாறு தீவனம் அளிக்க வேண்டும்.
-
இனப்பெருக்கத்திற்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கான தீவனம், பெட்டைக் கோழிகளுக்கான தீவனத்தில்குறைந்த அளவில் தேவைப்படும் தாது உப்புகள், வைட்டமின்கள், போன்றவற்றை கருவுறும் தன்மை அதிகமுடைய, குஞ்சு பொரிக்கும் திறனுடைய முட்டைகளை அதிகம் உற்பத்தி செய்ய அளிக்க வேண்டும்.
-
மேலும் இனப்பெருக்கத்திற்காக உபயோகிக்கப்படும் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் பூஞ்சை நச்சுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பூஞ்சை நச்சுகள் முட்டை உற்பத்தியினை பாதிப்பதுடன், கோழிகளின் உடல் நலத்தை பாதிப்பினை ஏற்படுத்தி, அவை உற்பத்தி செய்யும் முட்டைகளின் கருவுறும் திறன் மற்றும் குஞ்சு பொரிக்கும் திறன் பாதிக்கப்படும்.
சேவல் மற்றும் பெட்டைக் கோழிகளுக்கேற்றவாறு தீவனமளித்தல்
-
இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் சேவல்களுக்கு குறைந்த அளவு புரதம் அதாவது 13-14% இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அளவிற்கு அதிகமான புரதம் தீவனத்தில் இருந்தால் சேவல்கள் உற்பத்தி செய்யும் விந்தின் தரம் மற்றும் விந்தின் அளவும் பாதிக்கப்படும்.
-
எனவே இனப்பெருக்கம் செய்யும் பெட்டைக்கோழிகளுக்கு தனியான தீவனத்தை அளிக்க வேண்டும்.
-
இனப்பெருக்கத்திற்குப் பயன்படும் பெட்டைக் கோழிகளுக்கு 18% புரதமும், 3-3.5 சதவிகிதம் கால்சியமும் இருக்க வேண்டும். சேவல்களுக்கு 13-14% புரதமும், 1-1.5% கால்சியம், வைட்டமின் ஈ – 40மிகி/கிலோ அளவில் தீவனத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி சேவல்களுக்கும், பெட்டைக் கோழிகளுக்கும் அளிக்கப்படும் தீவனத்தில் எந்த வேறுபாடுகளும் இருக்கத் தேவையில்லை.
-
சேவல்கள் மற்றும் பெட்டைக் கோழிகளை ஆழ்கூளத் தரை மற்றும் சாய்வான தரை அமைப்பில் வளர்க்கும் போது தனித்தனியாக தீவனத்தட்டுகளை வைக்க வேண்டும். கூண்டு முறையில் வளர்க்கும் போது சேவல் மற்றும் பெட்டைக் கோழிகளைத் தனித்தனி கூண்டுகளில் வளர்ப்பதால் அவைகளுக்கு100% துல்லியமாக தீவனத்தை தனித்தனியாக அளிக்க வேண்டும்.
இனப்பெருக்கக் கோழிகளை ஒரே மாதிரியாகப் பராமரித்து வளர்த்தல்
-
இனப்பெருக்கக்கோழிகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான முட்டைகளைப் பெற அவற்றிற்கு முறையான மேலாண்மை செயல்பாடுகளை அளித்து, குறைந்த எண்ணிக்கையிலான கோழிகளைப் பண்ணையிலிருந்து கழிக்க வேண்டும்.
-
கோழிக்குஞ்சுகளின் நான்கு வார வயதிலிருந்து உடல் எடைக்கேற்றவாறு தனித்தனியாகப் பிரித்துப் பராமரிக்க வேண்டும்.
-
மெலிந்த, நோஞ்சானாக இருக்கக்கூடிய கோழிக்குஞ்சுகளுக்கு அதிக கவனம் அளித்து, கொட்டகையிலுள்ள அனைத்து கோழிகளும் ஒரே மாதிரியாக வளருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
-
எந்த ஒரு நிலையிலும் பண்ணையிலுள்ள 80% கோழிகள் ஒரே மாதிரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கருவுற்ற முட்டைகளை சேகரித்தல் மற்றும் பராமரித்தல்
-
சாய்வான தரை அல்லது ஆழ்கூள தரை அமைப்பில் கோழிகள் முட்டையிடுவதற்கு ஏற்றவாறு முட்டையிடும் பெட்டிகளை 4-5 கோழிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கோழிகளின் 18-20 வார வயதிலிருந்து கொட்டகையில் வைக்க வேண்டும். இரவு நேரங்களில் முட்டையிடும் பெட்டியினை மூடி வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் இரவு நேரங்களில் கோழிகள் முட்டையிடும் பெட்டிக்குள் சென்று அடங்கிக்கொள்வது தடுக்கப்படுவதால், முட்டையிடும் பெட்டி அழுக்காவதும் தடுக்கப்படுகிறது.
-
பெட்டைக்கோழிகளின் 22 வார வயதில் அவற்றின் கொட்டையில் நூறு கோழிகளுக்கு 8 சேவல்கள் என்ற விகிதத்தில் சேவல்களை விட வேண்டும்.
-
கருவுற்ற முட்டைகளை அவை 48-50 கிராம் எடையில் இருக்கும் போது அல்லது கோழிகள் அவற்றின் 25 வார வயதினை அடையும் போது இடும் முட்டைகளையோ அல்லது இவற்றில் எது அதிகமான கால அளவோ, அவற்றை அடை வைப்பதற்காக சேகரிக்க வேண்டும்.
-
காலையில் ஒரு முறையோ அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையோ ஆழ்கூளத் தரையில் அல்லது கம்பி வலைத் தரைகளில் வளர்க்கப்படும் கோழிக் கொட்டகையில் முட்டைகளை சேகரிக்க வேண்டும். கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிப்பண்ணைகளில் 2-3 முறை முட்டைகளை சேகரிக்க வேண்டும்.
-
சுத்தமான முட்டைகளை, உடைந்த, அழுக்கான, முறையற்ற வடிவமுடைய, அசாதாரமாண முட்டைகளிடமிருந்து தனியாகப் பிரித்து தனியாக வைக்க வேண்டும்.
-
சரியான வடிவம்,சரியான அளவு, தரமான முட்டை ஓடுகளை உடைய முட்டைகளை அடை வைப்பதற்காகப் பாதுகாத்து வைக்க வேண்டும். ஆனால் இவற்றை சுத்தம் செய்யக்கூடாது.
-
அசுத்தமடைந்த முட்டைகளை உப்புத் தாள் அல்லது உலர்ந்த துணி அல்லது பஞ்சு கொண்டு சுத்தம் செய்து அடை வைப்பதற்குப் பயன்படுத்தலாம்.
-
முட்டைகளை தண்ணீர் வைத்து சுத்தம் செய்யக்கூடாது. இதர சேதாரமுற்ற முட்டைகளை உணவுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
-
மூன்று மடங்கு பார்மலின் கரைசல் மற்றும் பொட்டாசியம் பர்மாங்கனேட் கொண்டு முட்டைகளை சேகரிக்கும் அறையில் அடை வைப்பதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னால் புகை மூட்டம் செய்ய வேண்டும்.
-
ஒரு வாரத்திற்கு மேல் கருவுற்ற முட்டைகளை சேமித்து வைக்கக்கூடாது. கூண்டு முறையில் கோழிகளை வளர்க்கும் போது, கூண்டின் முட்டை சேகரிக்கும் பகுதியின் மேல் நைலான் அல்லது ரப்பர் பாயினை விரித்து விடுவதால் முட்டைகளில் நுண்ணிய விரிசல்கள் விழுவது தடுக்கப்படும். இல்லையேல் கூண்டுகளின் தரையின் மீது பிளாஸ்டிக் அமைக்கப்பட்ட கூண்டுகளை உபயோகிக்கலாம்.
Hatchery operation and sanitation
-
கோழிக்குஞ்சுகளின் தேவைக்கேற்ப முட்டைகளை அடை வைக்க வேண்டும்.
-
குஞ்சு பொரிப்பகத்தின் அளவிற்கேற்ப முட்டைகளை ஒரு வாரத்தில் 1-6 முறை அடை வைக்கலாம். 100 கோழிக்குஞ்சுகள் தேவைப்பட்டால் 250 முட்டைகளை அடை வைக்க வேண்டும்.
-
மீதியிருக்கும் கருவுற்ற முட்டைகளை வேறு குஞ்சு பொரிப்பகங்களுக்கோ அல்லது உணவிற்காகவோ விற்று விடலாம்.
-
சேவல் கோழிக் குஞ்சுகளை சேவல் சந்தையில் விற்று விடலாம் அல்லது அவற்றை கொன்று அவற்றிலிருந்து சேவல் கறித்தூள் தயாரித்து தீவனத்தில் மீன் தூளுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.
-
நோஞ்சானாக 32 கிராம் எடைக்குக் கீழ் இருக்கும் பெட்டைக் கோழிக்குஞ்சுகளையும் கழித்து விடலாம்.
-
பழைய குஞ்சு பொரிப்பகங்களைப் போல் அல்லாமல், புதிதாக வடிவமைக்கப்படும் குஞ்சு பொரிப்பகங்களில் முட்டை அட்டைகளை சுத்தம் செய்வதற்கென தனியான ஒரு அறை, குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து 30 மீட்டர் தள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
உற்பத்தி நோக்கங்கள் மற்றும் தரம்
-
பரிந்துரைக்கப்பட்ட உடல் எடை, தீவனம் எடுக்கும் அளவு, முட்டை உற்பத்தி, இறப்பு விகிதம் போன்றவை கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
-
ஒவ்வொரு கோழிகளின் உள் இனத்திற்கேற்றவாறு மேற்கூறிய அம்சங்களின் மதிப்பு வேறுபடும். இனப்பெருக்கக் கோழிகளை வளர்ப்பவர் மேற்கூறிய தரத்தில் கோழிகளை உற்பத்தி செய்தால் மட்டுமே லாபம் அடைய முடியும்.
பல்வேறு வயதான இனப்பெருக்க முட்டைக்கோழிகளின் தீவனம் எடுக்கும் அளவு
வயது (வாரங்களில்) |
குஞ்சுப் பருவம்
(0-8) |
வளரும் பருவம்
(9-15) |
முட்டையிடுவதற்கு முந்தைய பருவம்
(16-18) |
முதல் முட்டையிடும் பருவம்
(19-34) |
இரண்டாம் முட்டையிடும் பருவம்
(35-72) |
புரதம் (%) |
20.00 |
17.00 |
17.00 |
19.00 |
17.50 |
உணவு செரிப்பதால் கிடைக்கும் எரி சக்தி (Kcal/kg) |
2750 |
2550 |
2550 |
2550 |
2500 |
லினோலியின் அமிலம் (%) |
1.40 |
0.10 |
1.20 |
1.40 |
1.20 |
லைசீன் (%) |
1.10 |
0.80 |
0.80 |
0.88 |
0.75 |
மெத்தியோனின் (%) |
0.50 |
0.40 |
0.45 |
0.50 |
0.40 |
மெத்தியோனின்+ சிஸ்டைன் (%) |
0.75 |
0.60 |
0.65 |
0.73 |
0.62 |
கால்சியம் (%) |
1.10 |
1.10 |
2.50 |
3.80 |
4.00 |
கிடைக்கும் பாஸ்பரஸ் |
0.45 |
0.45 |
0.45 |
0.45 |
0.42 |
சோடியம் (%) |
0.20 |
0.18 |
0.20 |
0.20 |
0.20 |
வைட்டமின் A (IU/kg) |
20,000 |
16,000 |
20,000 |
20,000 |
20,000 |
வைட்டமின் D (IU/kg) |
4,000 |
3,200 |
4,000 |
4,000 |
4,000 |
வைட்டமின் E (mg/kg) |
60 |
40 |
60 |
60 |
60 |
வைட்டமின் K (mg/kg) |
4.00 |
3.20 |
4.00 |
4.00 |
4.00 |
ரைபோபிளேவின் (mg/kg) |
20 |
50 |
20 |
20 |
|
இனப்பெருக்கக் கோழிகளின் உற்பத்திக் குணநலன்களின் தரம்
குணநலன் |
தரம் |
ஆழ்கூள முறையில் அல்லது சாய்வான தரை அமைப்பில் வளர்க்கப்படும் நூறு கோழிகளுக்கு கிடைக்கும் குஞ்சுகளின் எண்ணிக்கை |
10 |
கூண்டு முறையில் வளர்க்கப்படும் 100 கோழிகளுக்குக் கிடைக்கும் குஞ்சுகளின் எண்ணிக்கை |
3 |
முட்டை உற்பத்தி செய்யும் வரை கோழிகள் எடுக்கும் மொத்த தீவனத்தின் அளவு (கிலோகிராம்களில்) |
6.0 |
ஒரு நாளைக்கு ஒரு முட்டையிடும் கோழி உண்ணுன் தீவனத்தின் அளவு (கிலோக்களில்) |
110 |
இனப்பெருக்க காலத்தின் போது ஒரு சேவல் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் தீவனத்தின் அளவு (கிராம்களில்) |
100-105 |
முட்டை உற்பத்தியின் காலம் (வாரங்களில்) |
24-72 |
ஒரு கோழி உற்பத்தி செய்யும் கருவுற்ற முட்டைகளின் எண்ணிக்கை |
260 |
ஒரு நாள் பொரித்த மொத்த குஞ்சுகளின் எண்ணிக்கை |
230 |
ஒரு தாய்க்கோழியிடமிருந்து உற்பத்தி செய்த குஞ்சுகளின் எண்ணிக்கை |
110 |
ஒரு தாய்க்கோழியில் உற்பத்தி செய்யப்பட்ட விற்கும் தரமுடைய கோழிக்குஞ்சுகளின் எண்ணிக்கை |
105 (female) |
ஒரு நாள் வயதில் கோழிக்குஞ்சுகளின் எடை |
35 |
சேவல் இனப்பெருக்கத்திற்குத் தயாராகும் போது அதன் உடல் எடை |
1.6 |
பெட்டைக் கோழி இனப்பெருக்கத்திற்கு தயாராகும் போது அதன் உடல் எடை |
1.25 |
பண்ணையிலிருந்து கழிக்கும் போது சேவல்களின் சராசரி உடல் எடை |
2.0 |
பண்ணையிலிருந்து கழிக்கும் போது பெட்டைக் கோழிகளின் சராசரி உடல் எடை |
1.5 |
வளரும் பருவத்தில் ஏற்படும் இறப்பு விகிதம் |
5% |
முட்டையிடும் பருவத்தில் ஏற்படும் இறப்பு விகிதம் |
8% |
Parent stock performance potential
குணநலன்கள் |
சேவல் |
பெட்டைக்கோழி |
நான்கு வார வயதில் உடல் எடை (கிராம்களில்) |
300 |
250 |
எட்டு வார வயதில் உடல் எடை (கிராம்களில்) |
725 |
580 |
12 வார வயதில் உடல் எடை (கிராம்களில்) |
1100 |
850 |
16 வார வயதில் உடல் எடை (கிராம்களில்) |
1350 |
1100 |
20 வார வயதில் உடல் எடை (கிராம்களில்) |
1550 |
1300 |
40 வார வயதில் உடல் எடை (கிராம்களில்) |
2000 |
1600 |
72 வார வயதில் உடல் எடை (கிராம்களில்) |
2300 |
1700 |
ஒரே மாதிரியாக கோழிகள் இருப்பது |
>80% |
>80% |
0-8 வாரங்களில் எடுத்த மொத்த தீவனத்தின் அளவு(கிலோக்களில்) |
3.0 |
2.5 |
0-8 வாரங்களில் எடுத்த மொத்த தீவனத்தின் அளவு (கிலோக்களில்) |
4.5 |
4.0 |
0- 20 வாரங்களில் எடுத்த மொத்த தீவனத்தின் அளவு (கிலோக்களில்) |
7.5 |
6.5 |
21 - 72 வாரங்களில் எடுத்த மொத்த தீவனத்தின் அளவு (கிலோக்களில்) |
38.0 |
40.0 |
ஒரு கருவுற்ற முட்டை உற்பத்திக்கு கோழி எடுத்துக்கொண்ட தீவன அளவு (கிராம்களில்) |
145 |
ஒரு குஞ்சு பொரிக்கும் முட்டை உற்பத்திக்கு கோழி எடுத்துக்கொண்ட தீவன அளவு (கிராம்களில்) |
188 |
0-20 வார வயதில் சராசரி உயிர் வாழும் விகிதம் (%) |
94 |
21-72 வார வயதில் சராசரி உயிர் வாழும் விகிதம் (%) |
92 |
0-72 வார வயதில் இறப்பு விகிதம்(%) |
14% |
கொட்டகையில் விடப்பட்ட கோழிகளுக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை
(20-72 வார வயதில்) |
280 |
% குஞ்சு பொரிக்கும் சதவிகிதம் |
90 |
ஒரு கொட்டகையில் அடைக்கப்பட்ட கோழிகளுக்கு உற்பத்தி செய்யப்பட்ட விற்கும் தகுதியுள்ள குஞ்சுகளின் எண்ணிக்கை |
110 |
மேலே செல்க
இனப்பெருக்கக் கோழிகளில் ஏற்படும் குறைபாடுகள்
-
இனப்பெருக்கக் கோழிகளில் இனச்சேர்க்கையின் போது சேவல்கள் மற்றும் பெட்டைக் கோழிகளின் எண்ணிக்கையில் குறைபாடுகள், சேவல்களின் உடல் எடையினைக் கட்டுப்படுத்துவதில் குறைபாடுகள் போன்றவை ஏற்படும்.
-
இனப்பெருக்கக் குறைபாடுகளை நான்கு முட்டையிடும் பருவங்களாகப் பிரிக்கலாம் – மிக சிறிய வயதில் ஏற்படுதல், உயர்ந்த முட்டையிடும் பருவத்தில் ஏற்படுதல், நடுத்தர முட்டையிடும் பருவத்தில் ஏற்படுதல், முட்டையிடும் கடைசிப் பருவத்தில் ஏற்படுதல்.
I. மிகக் குறைந்த வயதில் முட்டையிடுதல் (26-28 வாரங்கள்)
-
நல்ல இனப்பெருக்க செயல்பாடுகளை உடைய சேவல்கள் குறைந்த எண்ணிக்கையில் அல்லது போதுமான எண்ணிக்கையில் இல்லாதிருத்தல். எனவே இனப்பெருக்க காலத்தின் ஆரம்பப் பகுதியில் 100 பெட்டைக் கோழிகளுக்கு 4 முதல் 5 சேவல்கள் இருத்தல்
-
மிக அதிகமான அயற்சியின் காரணமாக சில நேரங்களிலோ அல்லது நிரந்தரமாகவோ சாதாரணமாக இருக்கும் சில சேவல்களில் விந்து உற்பத்தி இருக்காது.
-
பார்ப்பதற்கு நன்றாக இல்லாத அல்லது ஒரே மாதிரி இல்லாத சேவல்களை இனப்பெருக்கக் கொட்டகையில் வைத்திருத்தல். மேலும் இனப்பெருக்கக் கொட்டகையில் கழிக்கத் தகுதியான கோழிகளை அதிக எண்ணிக்கையில் வைத்திருத்தல். அதாவது சிறிய சேவல்கள், காகம் போன்ற தலையினை உடைய சேவல்கள் போன்றவற்றை அதிக எண்ணிக்கையில் வைத்திருத்தல். முற்றிலும் இனவிருத்தி செய்ய முடியாத சேவல்களை அதிக எண்ணிக்கையில்இனப்பெருக்கக் கொட்டகையில் வைத்திருத்தல்
-
அதிக வேகம் உள்ள சேவல்களுக்கு பயந்து பெட்டைக் கோழிகள் முட்டையிடும் பெட்டிகளுக்குள்ளோ அல்லது பயந்து போய் கொட்டகையின் தரையில் இருக்கும். எனவே இவற்றின் இனச்சேர்க்கை செயல்பாடு குறைந்து விடும். எனவே ஆரம்ப இனப்பெருக்க காலத்தில் 100 பெட்டைக் கோழிகளுக்கு 4-5 சேவல்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது.
-
இனப்பெருக்கக் கோழிகளின் 25-251/2 வார வயதிற்கு முன்னால் முட்டைகளை அடைக்கு வைக்க வேண்டும். கோழிகளின் 24-25 வார வயதில் இடும் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 65-73 %, கருவுறும் சதவிகிதம் 83-88%. இந்த மேற்கூறிய உற்பத்தித்திறன்கள் கோழிகளுக்கு ஏதும் பாதிப்புகள் இல்லாமல் இருந்தால் இருக்கும்.
II. கோழிகளின் அதிகபட்ச உற்பத்தித் திறனில் குஞ்சு பொரிக்கும் திறன்(29-39 வாரங்கள்)
- இந்த வயதில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளின் கருவுறும் திறன் கீழ்க்கண்ட காரணங்களால் குறைந்து விடும்
-
இனப்பெருக்கத்திறன் நன்றாக உள்ள சேவல்கள் குறைவாக இருத்தல் அல்லது சேவல்கள் அதிக செயல்பாட்டுடன் இருத்தல் – மேற்கூறிய இரண்டு காரணங்கள் இனச்சேர்க்கை காலத்தின் ஆரம்பத்தில் இருந்தால் அதிக பட்ச உற்பத்தி காலம் முழுவதும் முட்டைகளின் கருவுறும் திறன் குறையும்
-
சேவல்கள் குறைந்த அளவு தீவனத்தை எடுத்தல்; குறைந்த தீவனம் எடுக்கும் திறனால் நல்ல உடற்திறனோடு இருக்கும் சேவல்கள் பண்ணையிலிருந்து கழிக்கப்பட்டு விடுவதுடன், நன்றாக இருக்கும் சேவல்களின் உடல் எடை குறைந்து விடுதவால் விந்து உற்பத்தியும் முழுவதும் நின்று விடும். சேவல்களுக்கென்று தனியாக தீவனம் அளிக்காத போதும், சேவல்கள் பெட்டைக் கோழிகளின் தீவனத்தை எடுக்க முடியாத போதும் மேற்கூறியவாறு விந்து உற்பத்தி சேவல்களில் பாதிக்கப்படும். உற்பத்தித் திறன் இல்லாத சேவல்களின் சராசரி உடல் எடை அதிகரிக்கும்.
-
இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் கோழிகள் மற்றும் சேவல்கள் குறைந்த அளவு தண்ணீர் குடித்தல்
-
நோய்கள் அல்லது கால்கள் பாதிக்கப்படுதல்
-
அதிக எண்ணிக்கையிலான கோழிகளைக் குறைவான இடத்தில் வைத்திருத்தல் – இவ்வாறு வைத்திருப்பதால் சேவல்களின் இனவிருத்தி செயல்பாடு பாதிக்கப்பட்டு, முட்டை உற்பத்தியும் குறைந்து விடுகிறது. எனவே ஒரு பெட்டைக் கோழிக்கு 1.8 சதுர அடி இடம் (ஒரு சதுர மீட்டரில் 6 கோழிகளுக்கு மேல்) சாய்வான தரை அமைப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
இனப்பெருக்கக் கோழிகளின் ஒரு கொட்டகையில் 9-10 சேவல்களுக்கு பதிலாக 12-13 சேவல்கள் இருந்தால் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் குறைந்து விடும். சில சேவல்கள் போதுமான அளவு தீவனத்தை உண்ணாத போது முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் பாதிக்கப்பட்டு விடும்.
III. மத்திய உற்பத்தி காலத்தில் முட்டைகளின் கருவுறும் திறன் (40-50 வாரங்கள்)
-
சேவல்கள் குறைவாக தீவனம் உட்கொள்ளுதல்
-
குறைவான அளவு தண்ணீரை சேவல்கள் மற்றும் கோழிகள் குடிக்காமல் இருத்தல்
-
நோய்கள் மற்றும் கால்களில் ஏற்படும் பாதிப்புகள்
-
அதிகமான எண்ணிக்கையிலான கோழிகளை குறைந்த இடத்தில் வைத்திருத்தல்
-
சேவல்களுக்கான தீவன இடத்தின் அளவு குறைவாக இருத்தல்
-
நல்ல இனப்பெருக்க செயல்பாடுகளுடன் இருக்கும் சேவல்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாமல் இருத்தல் – பொதுவாக 100 கோழிகளுக்கு பராமரிக்கப்படும் 81/2 – 91/2 % சேவல்களில் 2-3% இளம் சேவல்கள் இருக்கும். நடுத்தர உற்பத்தி காலத்தில் போதுமான அளவு இனப்பெருக்க செயல்பாட்டில் இருக்கும் சேவல்கள் இல்லாமல் இருப்பதற்கான காரணங்களாவன:
- அதிக எடையுடைய சேவல்கள் – இனப்பெருக்க செயல்பாடு குறைவாக இருத்தல்
- சேவல்களின் பாதங்கள் மற்றும் கால்கள் பாதிக்கப்படுதல் – இது உடல் எடை சார்ந்தது
- Ratio reduction - due to male mortality and normal culling.
-
சேவல்கள் அதிக செயல்பாட்டுடன் இருத்தல்- முன்பே கூறிய காரணங்களால் சேவல்கள் அதிக செயல்பாட்டுடன் இருக்கும்.ஆரம்ப இனப்பெருக்க காலத்தில் சேவல்கள் அதிக செயல்பாட்டுடன் இருக்க பழகி விடும். இவ்வாறு சேவல்கள் இருக்கும் போது, கொட்டகையில் பெட்டைக் கோழிகள் பயந்து காணப்படுவதையும், அவற்றின் முதுகில் காயங்களும் காணப்படும். மேலும் பெட்டைக் கோழிகள் பயந்து கொட்டகையில் இருக்கும் அல்லது முட்டையிடும் பெட்டிக்குள் ஒளிந்திருப்பதையும் காணலாம்.
-
அதிகமான இறகுகள் உதிர்தல் – மென்மையான முதுகினை உடைய பெட்டைக் கோழிகள் சேவல்களுடன் இனவிருத்தியினைத் தடுப்பதற்காக கொட்டகையிலேயே இருக்கும் அல்லது முட்டையிடும் பெட்டிகளுக்குள் ஒளிந்திருக்கும். குறைந்த தீவனம் எடுத்தல், குறைந்த அளவு சக்தி அல்லது புரதம் (அமினோ அமிலங்கள்) தீவனத்தில் இருத்தல், குளிர்ந்த தட்ப வெப்பநிலை போன்ற காரணங்களால் ஏற்படும்.
-
அதிக வெப்பமான தட்பவெப்பம் – முட்டை உற்பத்தியும், முட்டைகளின் கருவுறும் திறனும் பாதிக்கப்படும்.
IV. முட்டையிடும் காலத்தின் பின்பகுதியில் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் (50-65 வாரங்கள்)
-
வயதான காலத்தில் பொதுவாக ஏற்படும் இனவிருத்தி செயல்பாடு குறைதல், விந்தின் உற்பத்தியும், விந்துவில் விந்தணுவின் எண்ணிக்கை குறைபாடு போன்ற காரணங்களால் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் பாதிக்கப்படுகிறது. எனவே எப்போதும் பராமரிக்கப்படும் 9-91/2% சேவல்கள் கொட்டகையில் பராமரிக்கப்பட வேண்டும். இவற்றில் 7-8% சேவல்கள் நல்ல இனவிருத்தி செயல்பாட்டுடன் இருக்க வேண்டும். இந்த கால கட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளின் கருவுறும் திறன் கீழ்க்கண்ட காரணங்களால் பாதிக்கப்படுகிறது.
- 40-50 வார வயதில் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் குறைவதற்கான காரணங்களே இந்த வயதில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளின் குறைந்த குஞ்சு பொரிக்கும் திறனுக்கான காரணங்களாக இருக்கின்றன.
- அதிக எடையுள்ள பெட்டைக் கோழிகள் – முற்பகுதியில் கூறியபடி, இதனை அதிகப்படியாக விமர்சிக்க முடியாது.
- சேவல்களின் சராசரி உடல் எடை 10 பவுண்டுகள் முதல் (4.54 கிலோ) 9.71-9.81 பவுண்டுகளுக்கு மேல் இருப்பது நல்லது. 5.2 கிலோவிற்கு மேல் உடல் எடை இருக்கும் சேவல்களில் இந்த வயதில் இனச்சேர்க்கை செயல்பாடு குறைவாக இருக்கும்.
மேலே செல்க
இனப்பெருக்கத்திற்குப் பயன்படும் கோழிகள் மற்றும் சேவல்களைத் தேர்ந்தெடுத்தலும் கழித்தலும்
-
முட்டையிடாத, குறைந்த முட்டை உற்பத்தித் திறன் கொண்ட பெட்டைக் கோழிகளையும், மலட்டுத் தன்மை மற்றும் குறைந்த கருவுறும் திறனுடைய விந்துவினை உற்பத்தி செய்யும் சேவல்களை பண்ணையிலிருந்து நீக்குவது கழித்தல் எனப்படும்.
-
நோய் இல்லாமல் இருந்தால், கழிக்கும் கோழிகள் விற்பனை செய்வதற்கும், உண்ணுவதற்கும் ஏற்றவை.
-
பொதுவாக இனப்பெருக்கத்திற்கு சேவல்கள் அவற்றின் உடற்கட்டு, மற்றும் அவற்றின் விந்துவிலுள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை போன்ற காரணங்களை வைத்து இனப்பெருக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
-
இயற்கையான இனச்சேர்க்கை முறையில் சேவல்களின் விந்தணுக்களின் உற்பத்தியுடன், அவற்றின் இனச்சேர்க்கை செயல்பாடும் மிகவும் முக்கியமாகும்.
-
பெட்டைக் கோழிகளில் தரமான முட்டை உற்பத்தி செய்யும் குணநலன்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
-
குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட கோழிகளை பண்ணையிலிருந்து கழிப்பது முட்டை உற்பத்திக்கு ஆகும் செலவுகளைக் குறைப்பதுடன், நோய்களின் தாக்குதலையும் குறைத்து, அதிக உற்பத்தி செய்யும் பெட்டைக் கோழிகளுக்கான இட அளவையும் அதிகரிக்கும்.
-
பெட்டைக் கோழிகள் முட்டை உற்பத்தி செய்யாவிட்டாலும் தீவனம் உட்கொள்ளும். இந்த கோழிகளை பண்ணையிலிருந்து நீக்குவதால் நல்ல உற்பத்தித்திறன் கொண்ட கோழிகளுக்கு அதிக இடவசதியும், அதிக தீவனமும் கிடைக்கும்.
-
இனப்பெருக்கக் கோழிகள் இரண்டு முறையில் பண்ணையிலிருந்து கழிக்கப்படுகின்றன.
- இனப்பெருக்கக் கோழிகளை கொட்டகையில் விடும் போது கழித்தல்
- தனித்தனியாக கோழிகளைப் பரிசோதித்து, அவை முட்டையிடுகிறதா அல்லது அவற்றின் முந்தைய உற்பத்தித்திறனை ஆராய்ந்து அதன்படி அவற்றைப் பண்ணையிலிருந்து கழித்தல்
செயற்கை முறை கருவூட்டல்
-
கோழிகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க செயற்கை முறை கருவூட்டல் ஒரு முக்கியமான செயல்பாடாகும். குறிப்பாக அதிக எடையுள்ள இனப்பெருக்கக் கறிக்கோழிகள் மற்றும் இனப்பெருக்க வான்கோழிகள் போன்றவற்றில் முட்டைகளின் கருவுறும் திறன் குறைவான அளவு இருப்பதால் செயற்கை முறை கருவூட்டல் மிகவும் உபயோகமானதாக இருக்கிறது.
-
மாடுகளில் செயற்கை முறைக் கருவூட்டல் நன்றாக செயல்படுத்தப்படுகிறது என்றாலும் கோழியினங்களில் செயற்கை முறைக் கருவூட்டல் நன்றாக செயல்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் சேவல்களின் விந்தணுக்களை நீண்ட நாட்களுக்கு சேமிக்கும் தொழில்நுட்பங்கள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை.
-
தற்போது இருக்கும் தொழில் நுட்ப முறைகள் மூலம்,சேவல்களிடமிருந்து விந்து சேகரிக்கப்பட்டு அவற்றை அப்படியே அல்லது விந்துவிலுள்ள விந்தணுக்களின் அளவினைக் குறைக்க டைலுவன்ட் எனப்படும் திரவத்துடன் 1;2 என்ற விகிதத்தில் கலந்து உடனே செயற்கை முறை கருவூட்டலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சேவலில் இருந்து ஒரு முறை சேகரிக்கப்படும் விந்து, அதன் அளவு மற்றும் அதிலுள்ள விந்தணுக்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து 5-10 கோழிகளுக்கு செயற்கை முறைக் கருவூட்டல் செய்ய ஏற்றது.
-
செயற்கை முறைக் கருவூட்டல் பின்பற்றப்படும் பண்ணைகளில், சேவல்கள் அவை நடமாடும் அளவிற்கு இட வசதி கொண்ட தனிக் கூண்டுகளில் அடைத்து பராமரிக்கப்படுகின்றன.
-
சேவல்களிடமிருந்து விந்துவை சேகரிக்கவும், அதனைப் பயன்படுத்தி செயற்கை முறைக் கருவூட்டல் செய்யவும் ஒரு குழுவாக பணியாளர்கள் இருக்க வேண்டும்.
-
இந்தக் குழுவிலுள்ள பணியாளர்களை அடிக்கடி மாற்றுவதால் சேவல்களின் சாதாரண பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படும்
- விந்துவை சேவல்களில் சேகரிக்கும் போது அவற்றைக் கடினமாகக் கையாளுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கடினமாகக் கையாளும் போது சேவல்களுக்கு ஏற்படும் பயம் காரணமாக அவற்றின் விந்து வெளியேற்றப்படும் அளவு குறைந்துவிடும்.
கோழி விந்துவின் குணநலன்கள்
-
பொதுவாக சேவல்கள் அவற்றின் 16ம் வார வயதில் விந்துவை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். ஆனால் இந்த வயதில் உற்பத்தி செய்யப்படும் விந்தணுக்களின், கரு முட்டைகளைக் கருவூட்டும் திறன் குறைவாக இருக்கும்.
-
எனவே சேவல்கள் அவற்றின் 22-24 வார வயதில் விந்துவை சேகரிக்கப் பயன்படுத்தப்பட வேண்டும்.
-
சேவல்களின் விந்துவின் நிறம் வெள்ளையாக அல்லது முத்து வெள்ளை நிறத்தில் இருக்கும்.
-
அதிக எடையுள்ள இனத்தை சார்ந்த சேவல்கள் 0.75 – 1 மிலி விந்துவும், குறைவான எடையுள்ள இனத்தைச் சார்ந்த சேவல்கள் 0.4-0.6 மிலி விந்துவை உற்பத்தி செய்யும்.
-
ஒவ்வொரு நாள் இடைவெளி விட்டு ஒரு வாரத்தில் மூன்று முறை சேவல்களில் விந்து சேகரிக்க வேண்டும்.
-
தினம் தோறும் விந்துவை சேகரித்தாலும் அதன் கருவூட்டும் திறன் குறையாது, எனினும் அதில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
-
விந்துவில் விந்தணுக்களும், விந்து திரவம் அல்லது விந்து பிளாஸ்மாவும் இருக்கும்.
-
கோழிகளின் விந்துவில் அதிக எண்ணிக்கையிலான விந்தணுக்கள் இருக்கும் (அதாவது 3-8 மில்லியம் விந்தணுக்கள் ஒரு மிலி கறிக்கோழி சேவல்களின் விந்துவில் இருக்கும்).
-
கோழிகளின் விந்துவில் அதிக எண்ணிக்கையிலான விந்தணுக்கள் இருக்கும் (அதாவது 3-8 மில்லியம் விந்தணுக்கள் ஒரு மிலி கறிக்கோழி சேவல்களின் விந்துவில் இருக்கும்).
-
விந்து திரவம், விதைப்பையிலிருந்தும், வெளியேறும் குழாய்களிலிருந்தும் உற்பத்தி செய்யப்படுகிறது.
-
விந்து வெளியேறும் போது, சேவல்களின் ஆசனவாயில் சுரக்கப்படும் திரவமும் அதனுடன் சேர்ந்து வெளியேறும்.
-
ஆசன வாயில் உற்பத்தி செய்யப்படும் திரவம், விந்துவுடன் சேரும் போது நகரும் திறனற்ற விந்தணுக்களை நகரச் செய்கிறது. இதனால் கருமுட்டைகளைக் கருவூட்டும் திறன் விந்தணுக்களில் அதிகரிக்கிறது.
செயற்கை முறைக் கருவூட்டலுக்குத் தேவையான உபகரணங்கள்
- தண்டில் மெழுகு அடைக்கப்பட்ட சிறிய கண்ணாடி புனல்
- செயற்கை முறை கருவூட்டல் செய்யும் ஊசி
- அகன்ற வாயுடைய கண்ணாடி பாட்டில்
- விந்துவை சேகரிக்க ஒரு சிறிய கப்
- 18 C முதல் 20 C வெப்பநிலையில் தண்ணீரை வைத்திருக்க ஒரு குடுவை. இந்தக் குடுவையில் சிறிது நேரம் விந்துவை வைத்திருக்கலாம்.
செயற்கை முறைக் கருவூட்டல் செய்யும் போது பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள்
-
விந்து சேகரித்தல், விந்துவை டைலுவண்டுடன் கலத்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல் போன்ற மூன்று செயல்பாடுகள்.
-
விந்துவை நீர்க்கச் செய்யாமல், விந்து சேகரித்து 30 நிமிடத்தில் செயற்கை முறை கருவூட்டல் செய்யும் போது இரண்டாம் செயல்முறை தேவையில்லை.
விந்துவை சேகரித்தல்
-
விந்துவை சேகரிக்கும் செயல்பாடு செயற்கை முறைக் கருவூட்டலின் முதல் செயல்முறையாகும்.
-
விந்துவை சேகரிக்க, இரண்டு பணியாளர்கள் தேவை. ஒருவர் சேவலைக் கட்டுப்படுத்தி பிடித்துக்கொள்ள, மற்றொருவர் விந்துவை சேகரிக்க
-
விந்துவை சேகரிப்பவருக்கு வசதியான உயரத்தில் சேவலைக் கிடைமட்டமாக ஒருவர் பிடித்துக்கொள்ள வேண்டும்.
-
விந்துவை சேகரிக்க, விந்து சேகரிப்பவர் அவருடைய இடது கை பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை ஆசன வாயின் இரு புறமும் வைத்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
-
விந்துவை சேகரிப்பவர், அவரது வலது கையில் விந்து சேகரிக்கும் புனலைப் பிடித்துக் கொண்டு, இடது கை ஆள்காட்டி விரலை இடுப்பெலும்பின் கீழ் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
-
விரைவாகவும், தொடர்ந்தும் இவ்வாறு மசாஜ் செய்யும் போது சேவல் தன்னுடைய பேப்பிலாவை, ஆசனவாயில் வெளிப்படுத்தும்.
-
இவ்வாறு பேப்பிலா முழுவதும் வெளிப்படும் போது, விந்துவை சேகரிப்பபவர் தன்னுடைய இடதுகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலைப் பயன்படுத்தி பேப்பிலாவை அழுத்தி விந்துவை சேகரிக்க வேண்டும்.
-
விந்து எச்சம் மற்றும் இறகுகளால் மாசடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விந்துவை சேகரிக்கும் போது அதன் தரத்தினை அளவிடுதல்
-
பொதுவாக கோழியினங்களின் விந்து முத்து வெள்ளை நிறத்திலோ அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
-
மஞ்சள் நிறம் அல்லது இரத்தம் கலந்த விந்து, யூரேட் உப்புகள், எச்சம் மற்றும் இதர அழுக்குகள் கலந்த விந்துவை உபயோகிக்கக் கூடாது.
-
எப்போதும் விந்துவில் தண்ணீர் சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
சேகரித்த விந்துவில் ஏதேனும் மாசு இருந்தால், மாசுக்களை மெதுவாக பிப்பெட் உதவியால் உறிஞ்சி எடுத்து விட்டு பிறகு டைலுவன்ட்ஸ் எனும் நீர்க்கச் செய்யும் திரவத்தை விந்துவுடன் சேர்க்க வேண்டும்.
-
டைலுவன்ட் சேர்க்கப்பட்ட விந்துவை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து அதன் வெப்பநிலையினைக் குறைக்க வேண்டும்.
விந்துவை கோழிகளுக்கு செலுத்துதல்
-
விந்துவைக் கோழிகளுக்குள் செலுத்தப் பயன்படும் அனைத்து உபகரணங்களையும் உபயோகிப்பதற்கு முன்பாக நன்றாக சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும்.
-
கொட்டகையிலுள்ள அனைத்து கோழிகளும் முட்டைகளை இடும் நேரத்திற்குப் பிறகு கோழிகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்ய வேண்டும். ஏனெனில் கோழிகள் முட்டை இடாமல் இருந்தால் கருவூட்டல் செய்யும் போது விந்து கருப்பையினுள் செல்வதை, அதனுள் இருக்கும்முட்டை தடுத்து விடும்.
-
எனவே கோழிகளைப் பொதுவாக மதியம் மூன்று மணிக்கு மேல் செயற்கை முறை கருவூட்டல் செய்தால் தான் நல்ல தரமான கருவுற்ற முட்டைகளைப் பெற முடியும்
-
வான்கோழிப் பண்ணைகளில் நல்ல தரமான கருவுற்ற முட்டைகளைப் பெற மாலை 5 மணிக்குப் பிறகே அவற்றுக்கு செயற்கை முறைக் கருவூட்டல் செய்ய வேண்டும்
-
முட்டையிடாத கோழிகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்வது கடினம்
-
பொதுவாக கொட்டகையிலுள்ள கோழிகள் 25% உற்பத்தித்திறனை அடைந்த உடனே தான் செயற்கை முறைக் கருவூட்டல் செய்யப்படுகிறது
-
முதல் வாரத்தில் கோழிகளுக்கு செயற்கை முறைக் கருவூட்டல் செய்யும் போது வாரத்திற்கு இரண்டு முறையும், பிறகு வாரத்திற்கு ஒரு முறையும் செய்ய வேண்டும்.
செயற்கை முறைக் கருவூட்டல் செய்யும் முறை
-
கோழிகளின் கால்களைக் கெட்டியாக முதலில் பிடித்துக் கொண்டு, பிறகு அதன் ஆசனவாய்ப் பகுதியிலுள்ள இறகுகளை உயர்த்தி கோழிகளைக் கையாளுபவருக்கு நேராகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
-
ஆசனவாய்க்கு மேல்ப்பகுதியில், கருவூட்டல் செய்பவர் தனது வலது பெருவிரலை வைத்து வட்ட வடிவில் கோழியின் வயிற்றுப் பகுதியை மசாஜ் செய்ய வேண்டும்.
-
கோழிகளின் கரு முட்டைக் குழாய் வெளி வரும் போது, விந்து இருக்கும் ஊசியினை வைத்து, கரு முட்டையின் உட்பகுதியில் செலுத்தி விட வேண்டும்.
-
விந்து இருக்கும் ஊசியினை கோழிகளின் இனப்பெருக்க உறுப்பில் 1 இஞ்ச் அளவிற்கு உள்ளே செலுத்தி, இனப்பெருக்க உறுப்பும், கர்ப்பப்பையும் சேரும் இடத்தில் விந்துவை செலுத்த வேண்டும்.
செயற்கை முறை கருவூட்டல் செய்யும் இடைவெளியும், செலுத்தப்படும் விந்துவின் அளவும்
- கோழிகள் – 0.05 மிலி, வாரத்திற்கு ஒரு முறை
- வான்கோழிகள் – 0.025 மிலி, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை
- வாத்துகள் – 0.03 மிலி, 5 நாட்களுக்கு ஒரு முறை
- கூஸ் வாத்துகள் – 0.05 மிலி, ஏழு நாட்களுக்கு ஒரு முறை
- It has been observed that the males produce more semen of good quality during morning and females produce more fertile eggs when inseminated around 9 p.m.
விந்துவின் அளவும், பல்வேறு கோழியினங்களின் விந்துவில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கையும்
கோழியினம் |
விந்துவின் அளவு (மிலி) |
விந்துவிலுள்ள விந்தணுக்களின் அளவு (மில்லியன்/மிலி) |
ஒரு முறை செயற்கை முறை கருவூட்டல் (மில்லியன்) |
இறைச்சிக் கோழிகள் |
0.7 |
3500 |
150 to 200 |
முட்டைக் கோழிகள் |
0.5 |
4000 |
150 to 200 |
வான்கோழி சேவல் |
0.25 |
9000 |
300 |
கூஸ் வாத்து சேவல் |
0.6 |
2500 |
250 |
வாத்து சேவல் |
0.3 |
4000 |
300 |
மேலே செல்க